UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:
பெரியார் பல்கலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற, இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அச்சங்க சேலம் மாவட்ட குழு செயலர் பவித்ரன் அறிக்கை:
கடந்த, 21ல், பெரியார் பல்கலையில் திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு கட்டண அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இளநிலையில் ஒரு தாளுக்கு, 85ல் இருந்து, 100 ரூபாய், முதுநிலையில் ஒரு தாளுக்கு, 150ல் இருந்து, 175 ரூபாயாக உயர்த்தி, பல்கலை சார்ந்த அனைத்து தேர்வு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை, உடனே பெரியார் பல்கலை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.