UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM
ADDED : ஜூலை 17, 2024 10:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:
நாமக்கல் வட்டார போக்குவரத்து தெற்கு அலுவலர் முருகன் மற்றும் ஆய்வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள், நாமக்கல்லில் துறையூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தனர். இதில், ஒரு வாகனத்தில் போதிய அனுமதியின்றி மாணவர்களை ஏற்றி சென்றது தெரிந்தது. அதேபோல், 6 வாகனங்கள் முறையின்றி ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி சென்றுதும் தெரிந்தது. 7 வாகனங்களையும் சிறைபிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.