தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு 2ம் பெற்றோராக இருந்து வழிநடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

மாணவர்களுக்கு 2ம் பெற்றோராக இருந்து வழிநடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

மாணவர்களுக்கு 2ம் பெற்றோராக இருந்து வழிநடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


UPDATED : மே 17, 2024 12:00 AM

ADDED : மே 17, 2024 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2024 12:00 AM ADDED : மே 17, 2024 09:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட, தற்போது பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டும், ஒவ்வொரு மாணவரும் சிறப்பாக பாட திட்டங்களை படிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்வதுடன், மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி, கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். தற்போது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி, அனைவரையும் தேர்ச்சி பெற செய்து, உயர் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களின், 2ம் பெற்றோர்களாக இருந்து அவர்களை வழிநடத்த வேண்டும். பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று, பெற்றோர்

களுக்கு ஆலோசனை வழங்கி, அவர்களை தொடர் கல்வி கற்க, ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

சி.இ.ஓ., மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, கோவிந்தன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஹேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us