எம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்விற்கு முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்
எம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்விற்கு முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 08:20 AM

புதுச்சேரி:
எம்.பி.பி.எஸ் ., இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்விற்கு முன்னுரிமை கொடுப்பதற்கான காலக்கெடு 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
இந்திய மருத்துவ கவுன்சில் யு.ஜி., இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தும் காலக்கெடு தேதியை நீட்டித்துள்ளது. எனவே சென்டாக்கும் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பாடப்பிரிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் தேதியை வரும் 16ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டித்துள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாட பிரிவிற்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
ஏற்கனவே சென்டாக் முதற்கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்த மாணவர்கள் அப்படிப்பில் இருந்து விலக நினைத்தால் தங்களுடைய லாகின் மூலம் 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தெரிவிக்கலாம் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.