UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM
ADDED : ஜூன் 03, 2024 08:57 AM
கோவை:
வருகின்ற ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள இன்டெக் தொழில் கண்காட்சி 2024 ஆனது, கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இன்டெக் 2024 கண்காட்சியின் ஒரு அங்கமாக வரும் ஜூன் ஏழாம் தேதி 2024 ஆம் ஆண்டு, தங்களது கருத்தரங்க பங்குதாரரான டெக்ஸாஸ் வென்ச்சருடன் இணைந்து வழங்கும் 11 வது குளோபல் மன்யூ மேட்சிங் கிளஸ்டர் விஷன் (GMCV 2030) எனும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தயாரிப்பு தொழிற்சாலைகளில் Smart Manufacturing கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.
இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள பொறி தொழிற்சாலைகள் அளிக்கும் வரவேற்பு நல்ல முறையில் உள்ளது. பல்வேறு துறை சார்ந்த சுமார் 500 முக்கிய தொழிற்சாலைகள் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக குவிந்துள்ளன. தங்களுடைய நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதற்காக அவர்களுக்கு சுமார் 25,000 சதுர மீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அணிவகுக்கும் நமது சமகால நவீன தொழில்நுட்பங்கள் கண்டிப்பாக இந்த பகுதியில் வளர்ச்சியை ஊக்குவித்து உதவும்.
கண்காட்சியைப் பார்வையிட விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க்கில் பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்:
https://visitor.codissia.com/