UPDATED : ஏப் 02, 2026 04:33 PM
ADDED : ஏப் 02, 2026 04:36 PM
சேலம்:
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், மத்திய அரசின் நிதியுதவியுடன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான மாவட்ட அலுவலகம், சேலம் கலெக்டர் அலுவலகம், 3ம் தளத்தில், மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலகம் என அனைத்தும் அருகருகே இருந்தன. இதனால் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், பணி சார்ந்த அலுவலகங்களை அணுகுவது எளிதாக இருந்தது.
ஆனால் நேற்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட அலுவலகத்திலிருந்த பொருட்கள், ஆட்டோக்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, கோட்டை அரசு மகளிர் பள்ளி செயல்பட்டு வந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், 'கலெக்டர் அனுமதியோடு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட அலுவலகம், அரசு பள்ளி கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தில், வீடியோ கான்பரன்ஸ் அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.
