ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி: உத்தேச விடைகள் வெளியீடு
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி: உத்தேச விடைகள் வெளியீடு
UPDATED : ஆக 26, 2024 12:00 AM
ADDED : ஆக 26, 2024 10:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான உத்தேச விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பணிக்கான கணினி வழித் தேர்வு கடந்த ஆக.,12, 19, 20, 21 ஆகியத் தேதிகளில் நடந்தது. இதில் ஆக.,12ம் தேதி நடந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச விடைகளின் மீது மேல் முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் ஆக.,30ம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள Answer key
Challenge என்ற சாளரத்தில் மட்டுமே முறையீடு செய்ய வேண்டும். மற்ற தேதிகளில் நடந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.