sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

/

அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசு சேவைகளில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


UPDATED : அக் 10, 2025 05:15 PM

ADDED : அக் 10, 2025 05:26 PM

Google News

UPDATED : அக் 10, 2025 05:15 PM ADDED : அக் 10, 2025 05:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
உலக புத்தொழில் மாநாட்டின் இரண்டாம் நாளில், தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது:


தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தும் ஏஐ மிஷன் மூன்று முக்கியக் கொள்கைகளை மையமாகக் கொண்டதாக உள்ளது. உலகம் முழுவதும் அரசுகள் பல நிர்வாக சவால்களை சந்திக்கின்றன; மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் காரணமாக ஜனநாயக அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனை சமாளிக்க அரசின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுமற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது அவசியம்.

அரசின் மிகப்பெரிய தரவுத்தளங்களை ஒருங்கிணைத்து, மக்கள்-அரசு தொடர்பை மேம்படுத்தும் தளங்களை உருவாக்கி, அந்த தரவுகளை புதுமையாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் திறந்த தரவு தளமாக மாற்றுவது மிக முக்கியமான பணியாகும்.

தற்போது பல துறைகளில் ஏஐ திறனாய்வு மையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 55 துறைகளில் 272 பணியாளர்கள் பங்கேற்ற இன்டராக்டிவ் ஏஐ பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 100க்கும் மேற்பட்ட தரவுத் தொகுப்புகள் ஒருங்கிணைத்து பெயரில்லா வடிவில் திறந்த வெளியில் வெளியிட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், புதுமையாளர்கள் உலகளவில் அரிய தரவுகளை பயன்படுத்தி புதிய தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

6ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. ஐடி துறையின் ஐசிடி அகாடமி வழியாக கல்லூரி மாணவர்களுக்கான ஏஐ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது 18 கோடி பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 4 கோடி தனிநபர்களின் தகவல்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

விவசாயத் துறையில் பயிர் தரவு துல்லியத்தை மேம்படுத்த ஏஐ மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு, ஜிடிபி மதிப்பீட்டிலும் பயிர் காப்பீட்டிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பூச்சி கண்காணிப்பு, நோய் கண்காணிப்பு, தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு, முகம் அடையாளம் காணுதல் போன்ற பயன்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 'உழவன்', 'இ-பார்வை' போன்ற ஏஐ கருவிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

வாட்ஸ் ஆப் அடிப்படையிலான அரசுச் சேவை வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது மனித தவறு இடைஞ்சல்கள் இல்லாமல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் 520 நலத்திட்டங்களில் 370க்கும் மேற்பட்ட திட்டங்களின் பயனாளி தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2.3 கோடி குடும்பங்கள் சராசரியாக 23 நலத்திட்டங்களின் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஒருங்கிணைந்த தரவு அமைப்பு அரசுத் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் மக்கள்-அரசு இணைப்பை வலுப்படுத்தும்.

இவ்வாறு பேசினார்.

மாநாட்டின் வெற்றிக்காக வாழ்த்துகள் தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு உலகளவில் முன்னுதாரணமாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us