UPDATED : ஜூலை 02, 2026 06:55 PM
ADDED : ஜூலை 02, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் 2025-26ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் ரத்தினம் குளோபல் பல்கலையில் நடந்தது.
சங்க தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடந்த கூட்டத்தில் 34 அணிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், வரவு செலவு கணக்கு குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு இடையே இம்மாதம் 'கிட்டு டிராபி' கால்பந்து போட்டி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. செயலாளர் அனில்குமார், பொருளாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
