sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்

/

சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்

சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்

சர்வதேச புத்தக திருவிழா சென்னையில் துவக்கம்


UPDATED : ஜன 17, 2026 11:58 AM

ADDED : ஜன 17, 2026 12:01 PM

Google News

UPDATED : ஜன 17, 2026 11:58 AM ADDED : ஜன 17, 2026 12:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், சர்வதேச புத்தக திருவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவை, தி.மு.க., எம்.பி. கனிமொழி, கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், 102 நாடுகளை சேர்ந்த பதிப்பாளர்களும், தமிழகத்தை சேர்ந்த 90 பதிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், குஜராத், ராஜஸ்தான், கேரளா, டில்லி, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து, 42 பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:

சென்னை சர்வதேச புத்தக திருவிழாவை போல, கர்நாடகாவிலும் சர்வதேச புத்தக திருவிழா துவங்கப்பட உள்ளது. அதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், தங்கள் அனுபவத்தை கொண்டு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர், நாள்தோறும் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்கின்றனர்; இது, அவர்களுக்கு அரசியலமைப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழி பேசுகையில், “மதம், இனம் போன்ற தடைகளை இலக்கியம் உடைத்தெறிகிறது. உலக வாழ்க்கையை, புத்தகம் வழியாக மனிதன் அறிந்துக் கொள்கிறான். இந்த திருவிழா, உலக வாழ்க்கை, அவற்றின் போராட்டம் ஆகியவற்றை அறிந்துக் கொள்ள உதவும்,” என்றார்.

இந்த விழாவில், ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் புத்தக கண்காட்சி துணைத் தலைவர் கிளாடியா கைசர், பிரான்ஸ் நாட்டின் துணைத் துாதர் எதியன் ரோலான் பியக், பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us