பாரதியார் பல்கலையில் சர்வதேச மொழியியல் மாநாடு துவக்கம்
பாரதியார் பல்கலையில் சர்வதேச மொழியியல் மாநாடு துவக்கம்
UPDATED : நவ 19, 2026 02:34 PM
ADDED : நவ 19, 2026 02:35 PM
கோவை:
பாரதியார் பல்கலையில், 48வது சர்வதேச மொழியியல் மாநாடு துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடக்கும் இம்மாநாட்டில், 13 நாடுகள், 22 இந்திய மாநிலங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட பல்கலைகளின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்தார்.
இதில் அவர் பேசுகையில், ''மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் அடையாளம். பண்பாடு, வரலாறு, அறிவு மற்றும் நாகரீகத்தின் அடித்தளம். மொழிகளை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவது, பாதுகாத்தல் கல்விச் சமூகத்தின் முக்கிய பொறுப்பு'' என்றார்.
மாநாட்டில் இரண்டு ஆராய்ச்சி நுால்கள் மற்றும் விழா மலர் வெளியிடப்பட்டன. ஐந்து மூத்த மொழியியல் அறிஞர்களுக்கு கவுரவ உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் அப்பசாமி முருகையன், இந்திய மொழியியல் சங்கச் செயலர் அபிநவ் மிஸ்ரா, தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
