தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரியார் பல்கலை ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச கருத்தரங்கம்

பெரியார் பல்கலை ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச கருத்தரங்கம்

பெரியார் பல்கலை ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச கருத்தரங்கம்


UPDATED : அக் 07, 2026 01:11 PM

ADDED : அக் 07, 2026 01:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:11 PM ADDED : அக் 07, 2026 01:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி அருகே, பைசுஹள்ளியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பில், 'பொருளறிவியலில் சமீபத்திய போக்குகள்' என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

இதில், ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், மேம்பட்ட பொருட்கள், நிலையான தொழில்நுட்பங்கள் மற்றும் நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அண்மைக்கால அறிவியல் முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்ளப்பட்டன. இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் பிரசாத் வரவேற்றார். ஆராய்ச்சி மைய பொறுப்பு இயக்குனரும் இயற்பியல் துறைத் தலைவருமான செல்வபாண்டியன் தலைமை வகித்து பேசினார்.

மின்வேதியியல் ஆற்றல் மூலங்கள் பிரிவின் மூத்த விஞ்ஞானி சுதாகர், முதன்மை உரை ஆற்றினார். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தின் நானோ தொழில்நுட்பம் மற்றும் வினையூக்க ஆராய்ச்சி மையத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் சுரேஷ் சகாதேவன் பேசினார். ஆராய்ச்சி மாணவர்கள் மோகன் மற்றும் ப்ரீத்தா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us