சர்வதேச மாணவர்கள் பாதுகாப்பு: கரியர் மொசைக் 2025 அறிக்கை
சர்வதேச மாணவர்கள் பாதுகாப்பு: கரியர் மொசைக் 2025 அறிக்கை
UPDATED : அக் 09, 2025 08:22 AM
ADDED : அக் 09, 2025 08:24 AM

புதுடில்லி:
தென் ஆசியாவின் முன்னணி சர்வதேச மாணவர் ஆட்சேர்ப்பு நிறுவனம் கரியர் மொசைக், 2025 சர்வதேச மாணவர் பாதுகாப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், வீட்டுவசதி, மனநலம், கலாச்சார அடிப்படையிலான பாகுபாடு போன்ற சவால்கள் இருந்தாலும், பல்கலைக்கழகங்களும் அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதால், வெளிநாடுகளில் படிப்பது இன்று கடந்த காலத்தை விட பாதுகாப்பானதாகும் என கூறப்பட்டுள்ளது.
கேரியர் மொசைக் நிறுவனர் அபிஜித் ஜவேரி கூறுகையில், 'சர்வதேச கல்வி வெறும் கல்வி அல்ல; அது ஒரு மாணவரின் எதிர்காலத்தில் முதலீடு ஆகும்' என்று கூறினார்.
அறிக்கையின் முக்கிய விஷயங்கள்:
கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் 24/7 ஹெல்ப்லைன்கள், பாதுகாப்பு செயலிகள், நண்பர் அமைப்புகள் மற்றும் இரவு போக்குவரத்து பாதுகாப்பு.
வீட்டுவசதி பாதுகாப்பு: விதிகள், மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்.
மனநலம் ஆதரவு: ஆலோசனை, நல்வாழ்வு திட்டங்கள், நேர்த்தியான பராமரிப்பு போன்ற மெய்நிகர் சேவைகள்.
சமூக ஈடுபாடு: ஓரியண்டேஷன், மாணவர் சங்கங்கள், சுற்றுப்புற கண்காணிப்பு திட்டங்கள்.
சவால்கள்:
முதல் ஆண்டு மாணவர்களில் 20% பேர் மனநலக் கோளாறுகளுக்கு உள்ளாகுகிறார்கள்.
சில நாடுகளில் 3 மாணவர்களில் 1 பேர் வீட்டுவசதி மோசடிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆசிய, பெண்கள், பாலின அடையாளமும், தனித்துவமும் கொண்டோர் சமூகம் (LGBTQ+) மாணவர்களுக்கு கலாச்சார அடிப்படையிலான பாகுபாடு உள்ளது.
மாணவர் பாதுகாப்பு இப்போது சர்வதேச கல்வியில் மிக முக்கியமாகும். கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்காக அதிக முதலீடு செய்து, மாணவர்களுக்கு பாதுகாப்பான இடங்களாக தங்களை நிலைநிறுத்தி வருகின்றன.