UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM
ADDED : ஜூன் 21, 2025 09:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:
ஸ்ரீகாமராஜர் மெட்ரிக் பள்ளியில் சர்வேதேச யோகாதினம் பள்ளி செயலர் நரசிங்கசக்தி தலைமையில் நடந்தது.
பொருளாளர் முருகன், நிர்வாகிகள் ராமலிங்கம், டாக்டர் அமுதா, ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அறிவுத்திருக்கோயில் மதிவாணன், உஷா பேசினர். முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் அகிலன் ஏற்பாடு செய்தனர்.
நத்தம்:நத்தம் ராம்சன்ஸ் இன்டர்நேஷனல், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகாதின விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஜப்பான் நாட்டை சேர்ந்த கல்வியாளர் வாதா நறுப்யூமீ பேசினார். நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன், இண்டர்நேஷனல் நிர்வாக அதிகாரி தையல்நாயகி, துணை முதல்வர் அனுசியா, உடற்கல்வி ஆசிரியர்கள் செரின், திருப்பதி கலந்து கொண்டனர்.