தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/11 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான இன்டர்வியூ

11 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான இன்டர்வியூ

11 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான இன்டர்வியூ


UPDATED : நவ 19, 2026 02:36 PM

ADDED : நவ 19, 2026 02:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 02:36 PM ADDED : நவ 19, 2026 02:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையில் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின், ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பதவி உயர்வு வழங்குவதற்கான நேர்முக தேர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டங்கள் துவங்கின. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஆசிரியர்களின் பதவி உயர்வு கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலையில் 29 துறைகளை சேர்ந்த 70 ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நேர்காணல் மூலம், உதவி பேராசிரியர் நிலை1 ல் இருந்து 2க்கும், 2ல் இருந்து 3க்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. தமிழகம், கேரளம், கர்நாடகா, டில்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 29க்கு மேற்பட்ட மூத்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாடவியல் நிபுணர்கள் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.

ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆராய்ச்சி பணிகள், கற்பித்தல் திறன், பாடவியல் அறிவு மற்றும் கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகள் ஆகியவை நிபுணர் குழுவினரால் நேரடியாக மதிப்பீடு செய்யப்படும். யு.ஜி.சி.மற்றும் பல்கலை விதிமுறைகளின்படி தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

இணை பேராசிரியர் பதவியில் இருந்து பேராசிரியர் பதவிக்கான நேர்காணல் செயல்பாடுகளையும் உடனடியாக நடத்தி முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us