UPDATED : ஏப் 23, 2025 12:00 AM
ADDED : ஏப் 23, 2025 11:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
 மின் வாரிய தலைவராக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் தேசிய தரவரிசையில் 80வது இடம் பிடித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நான் ஏற்கனவே, சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, 361வது இடம் பிடித்தேன். தற்போது, 80வது இடம் பிடித்ததில் மகிழ்ச்சி. நான் முதுநிலை மருத்துவம் படித்தபடி, இந்த தேர்வுக்கு தயாரானேன். நான், மருத்துவ பாடத்தையே விருப்ப பாடமாக தேர்வு செய்தேன். இது, என் நான்காவது முயற்சி. அதனால், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவோர், விடா முயற்சி, தன்னம்பிக்கையுடனும், கடந்த கால தோல்விகளுக்கான தவறுகளில் இருந்தும் பாடம் கற்றால் வெற்றி சாத்தியம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

