தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி பாடப்புத்தகங்களில் க்யூ.ஆர்., கோடு அறிமுகம்

பள்ளி பாடப்புத்தகங்களில் க்யூ.ஆர்., கோடு அறிமுகம்

பள்ளி பாடப்புத்தகங்களில் க்யூ.ஆர்., கோடு அறிமுகம்


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 10:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷில்லாங்:
பள்ளி மாணவர்கள் கூடுதலாக அறிவை வளர்க்கும் வகையில், அவர்களது பாடப்புத்தங்களில் க்யூ.ஆர்., கோடுகளை சேர்க்க மேகாலய அரசு முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் பள்ளி பாடப்புத்தகங்களில் க்யூ.ஆர்., கோடு அறிமுகம் செய்யப்படுகிறது. மாணவர்கள் கூடுதல் அறிவை பெறும் வகையில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில கல்வித்துறை செயலர் மராக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:


குறிப்பிட்ட பாடங்களில் கூடுதல் அறிவை மாணவர்கள் பெறும் வகையில் க்யூ.ஆர்., கோடு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மாணவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்பதுடன் தான் விரும்பும் பாடங்களில் கூடுதல் திறன்களை வளர்த்து கொள்ள முடியும்.

மொபைல் போன்கள் உதவியால் இந்த க்யூ.ஆர்., கோடுகளை ஸ்கேன் செய்து, வீடியோக்களுடன் கூடிய பாடங்கள், விடைகளுடன் கூடிய வினாத்தாள்களையும் பெறலாம். இதன் வாயிலாக தேடுதல் நேரம் குறையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us