தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு

பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு

பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு


UPDATED : ஜன 16, 2026 09:21 PM

ADDED : ஜன 16, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2026 09:21 PM ADDED : ஜன 16, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வரும், 27 முதல் மார்ச், 7 வரை, 35 நாட்கள் நடக்க உள்ளது.

பயிற்சி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், உணவு ஆகியவை இலவசம். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us