UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 09:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
ஜூன், ஜூலையில் நடக்க உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி வாயிலாக 10ம் வகுப்பு, பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்கள், ஏற்கனவே படித்த பள்ளியிலும், தனி தேர்வர்கள் ஆன்லைனில் அரசு தேர்வு சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வேண்டும்.
10ம் வகுப்பு துணை தேர்வுக்கு 22 முதல் ஜூன் 4வரை; பிளஸ் 1 வகுப்புக்கு 22 முதல் ஜூன் 4 வரை; பிளஸ் 2வுக்கு வரும் 29 வரை விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில், 30, 31ல் விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

