sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை இறுதிக்கட்ட வாய்ப்பில் பங்கேற்க அழைப்பு

/

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை இறுதிக்கட்ட வாய்ப்பில் பங்கேற்க அழைப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை இறுதிக்கட்ட வாய்ப்பில் பங்கேற்க அழைப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை இறுதிக்கட்ட வாய்ப்பில் பங்கேற்க அழைப்பு


UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM

ADDED : ஜூன் 12, 2024 07:52 AM

Google News

UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM ADDED : ஜூன் 12, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாத மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பாக, சேர்க்கைக்கலந்தாய்வு, நாளை மறுதினம் துவங்குகிறது.

அரசு பள்ளிக்கல்வி இயக்க இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


2024-25ம் கல்வியாண்டில், புதுச்சேரி பகுதியில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிற்கான, பள்ளி அளவிலான சேர்க்கை மற்றும் கலந்தாய்வுகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவு பெற்றன. இதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு, பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்காக விண்ணப்பித்து கலந்தாய்வின் போது, இடம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு, இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் சேராத மாணவ-மாணவியர்களுக்கு, இறுதி வாய்ப்பாக, கலந்தாய்வு நடத்தி, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை ஆணை வழங்கப்பட உள்ளது.

அதனால் பிளஸ் 1 வகுப்பில், இடம் பெறுவதற்காக மாணவ - மாணவியர், பெற்றோருடன் தங்களின் 10ம் வகுப்பு மதிப்பெண் நகல், மாற்றுச்சான்றிதழ், சாதி, வருமான சான்றிதழ்களுடன் குருசுக்குப்பம், என்.கே.சி அரசு மேல்நிலைப்பள்ளியில், நடைபெறும் கலந்தாய்வில், பங்கேற்கலாம்.

இதில், 300 முதல் 499 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு வரும், 13ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், 250 முதல், 299 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு, அன்றைய தினம் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும், 175 முதல் 249 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு, வரும், 14ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் கலந்தாய்வு நடக்கிறது. புதுச்சேரி குடியிருப்பு பெறாத, 175 முதல் 499 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்களுக்கு அன்றைய தினம் மதியம், 2:30 மணி முதல் 5:30 மணி வரை, கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us