UPDATED : ஜன 18, 2026 02:47 PM
ADDED : ஜன 18, 2026 02:52 PM
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் ஜன.,19ல் பொதுமக்கள் பங்கேற்கும் திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. ஓவியம் வரைய 2 மணிநேரம் வழங்கப்படும். தேவையான உபகரணங்களை போட்டியாளர்கள் கொண்டு வர வேண்டும். அலைபேசி, மற்ற குறிப்புகள் பார்த்து வரைய அனுமதி இல்லை. ஒப்புவித்தல் போட்டியில் 30 நிமிடங்கள் வழங்கப்படும்.
அதிக எண்ணிக்கை, உச்சரிப்பு, பிழையின்றி ஒப்புவித்தல் உள்ளிட்டவை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். இரு போட்டியிலும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம் முதல் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி. பங்கேற்க விரும்புபவர்கள் ஏதாவது ஒரு அடையாள சான்று நகலுடன் காலை 9:30 மணிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 91596 68240 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

