தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய மாணவர்களை மீட்க வான்பரப்பை திறந்தது ஈரான்

இந்திய மாணவர்களை மீட்க வான்பரப்பை திறந்தது ஈரான்

இந்திய மாணவர்களை மீட்க வான்பரப்பை திறந்தது ஈரான்


UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM

ADDED : ஜூன் 21, 2025 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM ADDED : ஜூன் 21, 2025 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஈரானில் சிக்கித் தவிக்கும், 1,000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில், தங்கள் வான் பரப்பை பயன்படுத்த அந்நாட்டு அரசு சிறப்பு அனுமதி அளித்தது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இச்சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, ஆப்பரேஷன் சிந்து நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஈரான், அர்மேனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, ஈரானில் இருந்து, 110 இந்திய மாணவர்கள் நேற்று முன்தினம் டில்லி வந்தடைந்தனர். இந்நிலையில், ஈரானில் இருந்து அடுத்தகட்டமாக, 1,000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மஹான் ஏர்வேஸின் மூன்று விமானங்கள் வாயிலாக இந்திய மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்தது.

எனினும், போர்ச்சூழல் காரணமாக அங்குள்ள வான்பரப்பு மூடப்பட்டுஉள்ளது. இந்நிலையில், இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர, டெஹ்ரானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத மஷாத் நகருக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

அங்கிருந்து சிறப்பு விமானங்கள் வாயிலாக, டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஈரான் அரசு தன் வான்பரப்பை பயன்படுத்த சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us