தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி: தேர்வர்கள் புகார்

உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி: தேர்வர்கள் புகார்

உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி: தேர்வர்கள் புகார்


UPDATED : செப் 23, 2026 07:16 PM

ADDED : செப் 23, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 07:16 PM ADDED : செப் 23, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, உதவி பேராசிரியர் தேர்வில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன' என, தேர்வர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கல்லுாரி உதவி பேராசிரியர்கள் தேர்வர்களின் கூட்டமைப்பு சார்பில், கவுரவ விரிவுரையாளர் வெண்ணிலா அளித்த பேட்டி:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், 2,708 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது.

இத்தேர்வை, 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். தேர்வில், பொது அறிவு பகுதியில், 300 வார்த்தைகளுக்குள் விடையளிக்க வேண்டும் என, வினா கேட்கப்பட்டது.

ஆனால், அதன் விடைக்குறிப்பு, 700 வார்த்தைக்கு வழங்கப்பட்டுள்ளது. விடைக்குறிப்பு அடிப்படையிலேயே, விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, பலருக்கு அதில் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

கல்லுாரி உதவி பேராசிரியர், பொது அறிவில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, விரிந்துரைக்கும் வகையில் வினா கேட்கப்பட்டது.

ஆனால், அதில், பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும், தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது, மிகப்பெரிய குளறுபடி. இது போல, ஆரம்பம் முதலேயே பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. முதல்வர் விஜய், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us