தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான் அமைச்சரா?

தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான் அமைச்சரா?

தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான் அமைச்சரா?


UPDATED : ஜூலை 07, 2026 11:24 AM

ADDED : ஜூலை 07, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 11:24 AM ADDED : ஜூலை 07, 2026 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் முழுதும், 25,000 பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். முறையான கழிப்பறை, துாய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன.

போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான் அமைச்சரா அல்லது அரசு பள்ளிகளுக்கும் அமைச்சரா; தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை, அரசு பள்ளிகள் மீது அவர் காட்ட தவறுவது ஏன்?

தனியார் பள்ளிகள் குறித்து தினமும் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன், அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசு பள்ளிகளை சீர்படுத்தி, உள்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தனியார் பள்ளிகள் மீதான அக்கறையில், சிறிதளவேனும் அரசு பள்ளிகள் மீது காட்ட வேண்டும்.
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us