ஐஐடி-உடன் இணைந்து ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இஸ்ரோ
ஐஐடி-உடன் இணைந்து ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இஸ்ரோ
UPDATED : நவ 11, 2024 12:00 AM
ADDED : நவ 11, 2024 02:03 PM

சென்னை:
சென்னை ஐஐடி-உடன் இணைந்து திரவ- வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தை இஸ்ரோ தொடங்குகிறது.
இந்த மையத்தை அமைப்பதற்கான தொடக்க நிதியாக ரூ.1.84 கோடியை இஸ்ரோ நிறுவனம் வழங்கும். இஸ்ரோவின் விண்கலம் மற்றும் ஏவுவாகனம் தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக இந்த மையம் செயல்படும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி சென்னை (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) டீன் பேராசிரியர் மனு சந்தானம், இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் விக்டர் ஜோசப் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். ஐஐடி சென்னை இயந்திரப் பொறியியல் துறையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா மேலும் இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.