UPDATED : மார் 20, 2025 12:00 AM
ADDED : மார் 20, 2025 04:46 PM

சென்னை:
விண்வெளி நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்த்துள்ளன.
இஸ்ரோ மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதன் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் பல்வேறு மக்கள் தொடர்பு திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
கண்காட்சிகள், விரிவுரைகள், மாணவர் பயிலரங்குகள், இணையதள படிப்புகள், இளம் விஞ்ஞானி திட்டம் (யுவிகா) போன்ற சிறப்பு திட்டங்கள் ஆகியவை இத்திட்டத்தின் பகுதிகளாக உள்ளன. மேலும் இஸ்ரோ கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இணையக் கருத்தரங்குகளை நடத்துகிறது. சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுடன் இணைந்து விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஊக்குவிக்கிறது.
சந்திரயான் திட்டங்களின் வெற்றி நாடு முழுவதும் உள்ள மாணவ சமுதாயத்தை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் சந்திர ஆய்வு திட்டங்கள் மாணவர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.