UPDATED : மே 23, 2024 12:00 AM
ADDED : மே 23, 2024 10:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மாநகர போக்குவரத்து கழக முதுநிலை துணை மேலாளர் வெளியிட்ட அறிவிப்பு:
மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படும், குரோம் பேட்டை ஐ.டி.ஐ-.,யில் 42-வது தொழிற் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படஉள்ளன. மோட்டார் வாகன பயிற்சியில் சேர, 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.டி.சி., முன்னாள், இந்நாள் பணியாளர்கள் வாரிசுகளுக்கு பயிற்சி கட்டணமில்லை. இதற்கானஆவணங்களுடன் பணியாளர்கள் தங்களது பணிமனைகளில் இருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் ஜூன் 30-ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதர விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் வசூலிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.