தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜப்பானின் கெய்ரோஸ் ராக்கெட் திட்டம் தோல்வி; ஏவிய சில நிமிடங்களில் வெடித்து சிதறியது!

ஜப்பானின் கெய்ரோஸ் ராக்கெட் திட்டம் தோல்வி; ஏவிய சில நிமிடங்களில் வெடித்து சிதறியது!

ஜப்பானின் கெய்ரோஸ் ராக்கெட் திட்டம் தோல்வி; ஏவிய சில நிமிடங்களில் வெடித்து சிதறியது!


UPDATED : டிச 20, 2024 12:00 AM

ADDED : டிச 20, 2024 08:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2024 12:00 AM ADDED : டிச 20, 2024 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டோக்கியோ:
ஜப்பானின் கெய்ரோஸ் ராக்கெட், விண்ணில் ஏவிய சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது. 2 வது முறையாக, முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஜப்பானை சேர்ந்த, ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் கெய்ரோஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது. கடந்த மார்ச் 13ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே வெடித்து சிதறியது. இதனால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், மீண்டும் 2வது முறையாக, ஸ்பேஸ் ஒன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வாகாயாமாவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் கீ தளத்திலிருந்து 5 சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்ட கெய்ரோஸ் ராக்கெட்டை ஏவியது. ஆனால் விண்ணில் ஏவிய சில நிமிடங்களிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது.

இதனால் 2வது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால், பாதுகாப்பு கருதி அந்த ராக்கெட்டை வெடிக்கச் செய்தோம் என ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us