நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
UPDATED : ஜூலை 21, 2026 04:37 PM
ADDED : ஜூலை 21, 2026 04:39 PM
மந்தாரக்குப்பம்:
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லுாரியில் சேர உள்ள ஜெயப்பிரியா வித்யாலாயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமம், அலன் உடன் இணைந்து மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கி வருகிறது. சமீபத்தில் வெளியான நீட் 2026 தேர்வு முடிவுகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறப்பான மதிப்பெண் பெற்றனர்.
அதில் 17க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இச்சாதனை பாராட்டும் வகையில் விருத்தாச்சலம் ஜெயப்பிரியா கன்வென்ஷன் ஹாலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும நிறுவனத் தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, மாணவர்கள் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.
அலன் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல தலைவர் சந்தோஷ், ஆயுஷ் சிங், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, தலைமை முதல்வர் கேப்ரியல் அந்துவன், ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி முதல்வர்கள் சிதம்பரி, நித்யா, முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
