ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவருக்கு பாராட்டு
ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவருக்கு பாராட்டு
UPDATED : செப் 20, 2026 01:39 PM
ADDED : செப் 20, 2026 01:41 PM
திருப்பூர்:
15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் புனிதன், தெற்காசிய கையெறிபந்து போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
மாணவர் புனிதன் பள்ளி அளவிலான குறுமையம், மாவட்ட போட்டிகளில் அசத்தி, மண்டல அளவிலான த்ரோபால் போட்டிக்கு தேர்வாகிய புனிதன், மண்டல அளவிலான பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்து முறை தங்கம் வென்றுள்ளார்.
2024ல் எறிபந்து போட்டி மூத்தோர் பிரிவில் வெள்ளி பதக்கமும், 2026ல் மாநில அளவிலான, கையெறிபந்து போட்டியில் தங்கமும் வென்றார். 2023 - 24ல், நடந்த தேசிய அளவிலான, மிக இளையோர் கையெறிபந்து தொடரிலும், 2024 - 25ல் ஹைதராபாத்தில் தேசிய மூத்தோர் கையெறிபந்து தொடரிலும் வெள்ளி வென்றுள்ளார்.
நடப்பாண்டு தெற்காசிய கையெறிபந்து போட்டித் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற புனிதன் வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவர் புனிதனை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி சிறப்பு விருந்தினராக அழைத்து, பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க செய்து, கவுரப்படுத்தி, பாராட்டு தெரிவித்தார்.
