ஜே.இ.இ., தேர்வு முடிவு வெளியீடு: பீஹார் மாணவர் முதலிடம்
ஜே.இ.இ., தேர்வு முடிவு வெளியீடு: பீஹார் மாணவர் முதலிடம்
UPDATED : ஜூன் 02, 2026 10:19 AM
ADDED : ஜூன் 02, 2026 10:20 AM
புதுடில்லி:
ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்காக நடந்த ஜே.இ.இ., பிரதான தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. பீஹாரை சேர்ந்த மாணவர், தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.,க்களில் இளநிலை மாணவர் சேர்க்கை ஜே.இ.இ., பிரதான தேர்வு வாயிலாக நடத்தப்படுகிறது. தேர்வை ஐ.ஐ.டி., ரூர்க்கி நடத்துகிறது. நடப்பாண்டின் ஜே.இ.இ., பிரதான தேர்வு மே 17ம் தேதி நடந்தது. 1.80 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 56,880 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 10,107 பேர் மாணவிகள்.
இந்தத் தேர்வில், டில்லி ஐ.ஐ.டி., மண்டலத்துக்கு உட்பட்ட சுபம் குமார் என்பவர் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். பீஹாரை சேர்ந்த இவர், 360க்கு 330 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 2 மற்றும் 3 இடத்தை டில்லி மண்டலத்தை சேர்ந்த கபிர் சில்லார் மற்றும் ஜடாயின் சஹார் என்ற மாணவர்கள் பிடித்துள்ளார்.
அரோஹி தேஷ்பாண்டே என்ற மாணவி, பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
