sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜே.இ.இ., தேர்வு வரும் 22ல் துவக்கம்

/

ஜே.இ.இ., தேர்வு வரும் 22ல் துவக்கம்

ஜே.இ.இ., தேர்வு வரும் 22ல் துவக்கம்

ஜே.இ.இ., தேர்வு வரும் 22ல் துவக்கம்


UPDATED : ஜன 13, 2025 12:00 AM

ADDED : ஜன 13, 2025 03:08 PM

Google News

UPDATED : ஜன 13, 2025 12:00 AM ADDED : ஜன 13, 2025 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு, வரும் 22 முதல், 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியில், 15 தேர்வு மையங்களிலும், வரும் 22, 23, 24, 28, 29ம் தேதிகளில், பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான முதல் தாள் தேர்வுகள் நடக்க உள்ளன.

அதேபோல, பி.ஆர்க்., - பி.பிளானிங், உள்ளிட்ட படிப்புகளுக்கான, 2ஏ, 2பி, 2ஏ,பி., ஆகிய தாள்களுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி நடக்கும். விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வாளர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், பின்னர் வழங்கப்படும். மேலும் விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us