UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 12:03 PM

சென்னை:
உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பில் சேர நடத்தப்படும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு ஏப்., 4ல் தொடங்குகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும் இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு ஜனவரியில் முடிந்து, தேர்வு முடிவும் வெளியாகி விட்டது.
இரண்டாம் கட்ட தேர்வு, வரும் 4, 5, 6, 8, 9ம் தேதிகளில் நாடு முழுதும் நடக்கிறது. பி.ஆர்க்., படிப்புக்கான ஜே.இ.இ., தேர்வு, ஏப்., 12ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.