UPDATED : நவ 02, 2025 09:29 AM
ADDED : நவ 02, 2025 09:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
வரும் 2026ம் ஆண்டுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வின் முதல் பகுதி, ஜனவரி 21 முதல் 30ம் தேதிக்குள் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில், வரும் 27 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள், அடுத்த ஆண்டு பிப்., 12ம் தேதி வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

