தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மரில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி அக்., 2இல் மரக்கன்றுகள் நட்டு நிறைவு செய்ய முடிவு

ஜிப்மரில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி அக்., 2இல் மரக்கன்றுகள் நட்டு நிறைவு செய்ய முடிவு

ஜிப்மரில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி அக்., 2இல் மரக்கன்றுகள் நட்டு நிறைவு செய்ய முடிவு


UPDATED : செப் 30, 2026 05:57 PM

ADDED : செப் 30, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 05:57 PM ADDED : செப் 30, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஜிப்மரில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் செப்., 17 முதல் அக்., 2ம் தேதி வரை 'தூய்மை இந்தியா சேவை பிரசாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜிப்மர் மருத்துவமனையில் துாய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று ஜிப்மர் வளாகத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணியை, ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் சாகா வினோத் குமார், மூத்த அலுவலர்கள் மற்றும் செவிலியர் குழுவினர் பங்கேற்றனர்.

பேரணியின் போது துாய்மை , தனிநபர் சுகாதாரம், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பசுமையான சுற்றுச்சூழலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.

அக்., 1ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் மெகா துாய்மைப் பணியை ஜிப்மர் மேற்கொள்ளவுள்ளது. இதில் ஜிப்மர் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு ரயில் நிலைய வளாக சுற்றுப்புறப் பகுதிகளைத் துாய்மைபடுத்த உள்ளனர்.

தொடர்ந்து, காந்தி ஜெயந்தியான அக்., 2ம் தேதி ஜிப்மர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியுடன் இந்த துாய்மை இந்தியா சேவை பிரசாரம் நிறைவு பெறுகிறது என ஜிப்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us