திருத்தணியில் வரும் 25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருத்தணியில் வரும் 25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
UPDATED : செப் 22, 2026 12:21 PM
ADDED : செப் 22, 2026 12:23 PM
திருவள்ளூர்:
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கலைக் கல்லுாரியில், வரும் 25ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின், அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் மூலம், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், வரும் 25ம் தேதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கலைக்கல்லுாரியில், காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில், 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்கலாம். இதில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
