sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிப்ட் - டீ கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

நிப்ட் - டீ கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

நிப்ட் - டீ கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : ஏப் 13, 2026 06:54 PM

ADDED : ஏப் 13, 2026 06:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2026 06:54 PM ADDED : ஏப் 13, 2026 06:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட் - டீ பேஷன் கல்லூரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி துறை தலைவர் சம்பத், கல்லூரி முதல்வர் ராதாமணி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னலாடை உற்பத்தி, ஐ.டி., நிறுவனங்கள், 30 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, நேர்முகத் தேர்வு நடத்தினர். பல்வேறு பிரிவுகளில் பணிபுரிவதற்காக, தேர்வு நடைபெற்றது. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டில், மொத்தம் 305 மாணவர்களில், 220 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர்.

'நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களில் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்பட்டு, பணியில் இணைவதற்கான நியமன ஆணை வழங்கப்படும்; மாணவர்களின் தகுதிக்கு ஏற்ப, ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்,' என கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us