UPDATED : பிப் 20, 2026 01:31 PM
ADDED : பிப் 20, 2026 01:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
திறன் மேம்பாட்டு பயிற்சி வேலை வாய்ப்பு முகாம் இன்று துவங்குகிறது.
புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் மற்றும் தி மா ஃபோய் அறக்கட்டளை இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமை 2 நாட்கள் நடத்துகிறது. லாஸ்பேட்டை, பெண்கள் இன்ஜினியரிங் கல்லுாரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம் துவங்குகிறது. நாளை 21ம் தேதியும் முகாம் நடக்கிறது.
காலை 09:30 மணி முதல் மாலை 04:00 மணி வரை முகாம் நடக்கிறது. இதில் 10வது, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., ஓட்டல் நிர்வாகம், இதர பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் பங்கேற்கின்றனர். 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

