தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : செப் 17, 2026 02:18 PM

ADDED : செப் 17, 2026 02:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 02:18 PM ADDED : செப் 17, 2026 02:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (18ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.

இதில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், கிருஷ்ண கிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பொறி-யியல், ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

தனியார் துறையில் பணி புரிய ஆர்வமும், கல்வித்தகுதியும் உடைய அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us