UPDATED : அக் 12, 2026 08:01 PM
ADDED : அக் 12, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை சார்பில், வேலைவாய்ப்பு முகாம் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நடந்தது.
முகாமினை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.
முகாமில் தொழிலாளர் துறை செயலர், வேலைவாய்ப்புத் துறை துணை ஆணையர், கல்லுாரி முதல்வர், வேலைவாய்ப்பு அலுவலகத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
