UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஓமன் நாட்டில், இண்டஸ்ட்ரி பேக்ரவுண்ட் மற்றும், எலக்ட்ரிக்கல் மெயின்டனன்ஸ் பணிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா முடித்து, இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள ஆண்கள், www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், ovemclnm@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு, சுயவிபர விண்ணப்ப படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலை, டிச., 10க்குள் அனுப்ப வேண்டும் என, அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தேர்வு செய்யப்படுவோருக்கு, மாத ஊதியமாக, 35,000 முதல் 40,000 ரூபாய் வரை வழங்கப்படும்.