நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சியுடன் பணி வாய்ப்பு
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சியுடன் பணி வாய்ப்பு
UPDATED : ஆக 16, 2024 12:00 AM
ADDED : ஆக 16, 2024 08:22 AM

ஈரோடு:
நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், எச்.சி.எல்., தொழில் நுட்ப நிறுவனம் மூலம் பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்குகிறது.
கடந்த, 2023-24ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, 75 சதவீதம் மதிப்பெண் பெற்று, கலை பாடப்பிரிவு மாணவ, மாணவியர், நான் முதல்வன் திட்டத்தில் இப்பயிற்சியுடன் பணி வாய்ப்பு பெறலாம். இத்தேர்வு எழுதுவதற்கு, வீடியோ லிங்கை https://youtube/yyPZYtYP40 பார்த்து, https://registrations.hcltechbeec.com லிங்கை பயன்படுத்தி தங்கள் விபரத்தை உள்ளீடு செய்ய வேண்டும். பின் தங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் விண்ணப்ப எண்ணை குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
இதற்கான தேர்வு நாளை 17ம் தேதி, நாளை மறுதினம் 18ல் கோபி பி.கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், காங்கேயம் நத்தக்கடையூர் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியிலும் நடக்க உள்ளது.மாணவர்கள் அருகே உள்ள தேர்வு மையத்தில் பங்கேற்கலாம். தேர்வு எழுத வரும்போது, தங்களது கல்வி சான்று நகல், ஆதார் அட்டை நகல், பதிவு செய்த மொபைல் எண்ணுள்ள போனை கொண்டு வர வேண்டும்.இத்திட்டத்தில் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கட்டணத்தை அரசு ஏற்கும். பயிற்சியின்போது மாதம், 10,000 ரூபாய் உதவித்தொகை பெறலாம் என்பது உட்பட பல்வேறு பலன்களை பெறலாம்.