தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொச்சியில் இந்தியா - அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

கொச்சியில் இந்தியா - அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

கொச்சியில் இந்தியா - அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி


UPDATED : ஆக 10, 2026 01:57 PM

ADDED : ஆக 10, 2026 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 01:57 PM ADDED : ஆக 10, 2026 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொச்சி:
இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படைகள் இணைந்து நடத்தும் வெடிபொருள் அகற்றும் பயிற்சி கொச்சியில் உள்ள தெற்கு கடற்படையில் ஆக.,10 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைகள் கடந்த 2005ம் ஆண்டில் இருந்து மீட்பு மற்றும் வெடிபொருள் அகற்றும் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில், இது 8வது கூட்டுப்பயிற்சியாகும்.

ஆக.,10 முதல் 14ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியானது, இரு நாட்டு கடற்படைகளின் வெடிபொருள் அகற்றும் பயிற்சி மற்றும் சிறப்பு டைவிங் குழுக்களிடையே தொழில்முறை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் உதவும் என்று இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், 5 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துப் பரிமாற்றங்கள், பரஸ்பர பயிற்சிகள், உபகரணங்களின் செயல்முறை விளக்கங்கள் மற்றும் சூழல் சார்ந்த நடைமுறைப் பயிற்சிகள் ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us