UPDATED : ஆக 02, 2026 12:39 PM
ADDED : ஆக 02, 2026 12:40 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் 39வது பட்டமளிப்பு விழா இணை தலைவர் டாக்டர் அறிவழகி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், பல்கலை செயற்குழு உறுப்பினர் கதிரேசன் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் நாராயணன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், பட்டங்களை வழங்கி மத்திய தொழில்நுட்ப அமைச்சக சி.எஸ்.ஐ.ஆர்., இயக்குனர் டாக்டர் வேணுகோபால் அஜந்தா, ராக்கெட் இந்தியா நிறுவன தொழில்நுட்ப தலைவர் மோகன் பாபு பாலச்சந்திரன், கேப்ஜெமினியின் எப்எஸ் கோர் டெக்னாலஜி துணைத் தலைவர் தினகர் செல்வின் ஆகியோரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினர். 4835 மாணவர்கள் பட்டங்களை பெற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் பெற்றோர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், இயக்குனர்கள், டீன்கள், துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
