தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தகுதி ஒப்புதல் பெறாத முதல்வர்கள், பேராசிரியர்கள் கதி என்ன?

தகுதி ஒப்புதல் பெறாத முதல்வர்கள், பேராசிரியர்கள் கதி என்ன?

தகுதி ஒப்புதல் பெறாத முதல்வர்கள், பேராசிரியர்கள் கதி என்ன?


UPDATED : மே 09, 2011 12:00 AM

ADDED : மே 09, 2011 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2011 12:00 AM ADDED : மே 09, 2011 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை பல்கலையின் கல்வித்தகுதி ஒப்புதல் பெறாமல், பணியில் உள்ள கல்லூரி முதல்வர்கள், பல்கலையின் ஒப்புதலை பெறாத கல்லூரி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று(09-05-11) நடக்கும் சென்னை பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.


சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக திருவாசகம் பொறுப்பேற்ற பின், நிர்வாகத்தை சீர்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 4ம் தேதியன்று திருவாசகம் நிருபர்களிடம் கூறும்போது, "சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 70 சதவீத ஆசிரியர்கள் பல்கலையின் ஒப்புதலை பெறாமல் பணியாற்றி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.


அதேபோல், " கல்லூரி முதல்வர்களில் 30 சதவீதம் பேர் கல்வித்தகுதி ஒப்புதல் பெறாமல் பொறுப்பு முதல்வர்களாக பணியாற்றி வருகின்றனர். விதிமுறைகளின்படி, ஆறு மாதங்கள் மட்டுமே பொறுப்பு முதல்வர்களாக அவர்கள் பணிபுரிய முடியும். ஆனால், இவர்கள் விதிமுறைகளுக்கு மாறாக தொடர்ந்து கல்லூரி முதல்வர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதுகுறித்து, சிண்டிகேட் கூட்டத்தில் விவாதித்து முடிவுகளை எடுக்கவுள்ளோம் என்று துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.


இந்நிலையில், சென்னை பல்கலையின் சிண்டிகேட் கூட்டம் இன்று(09-05-11) கூடுகிறது. இந்த கூட்டத்தில், கல்வித்தகுதி ஒப்புதல் பெறாமல், "பொறுப்பு" முதல்வர்களாக பணிபுரிவோர் மற்றும் ஒப்புதல் பெறாத பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுகுறித்து கல்வியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, "சென்னை பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் பலவற்றில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, விதி மீறல்கள் தொடர்ந்து வருகின்றன. பல்கலை துணைவேந்தராக திருவாசகம் பொறுப்பேற்றபின், இதுதொடர்பாக பல புகார்கள் அவருக்கு வந்துள்ளன. இந்த புகார்கள் மற்றும் ஆய்வின் ஆடிப்படையில், 70 சதவீத ஆசிரியர்கள் மற்றும் 30 சதவீத கல்லூரி முதல்வர்கள், பல்கலையின் ஒப்புதல் பெறாமல் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதை வெளிப்படையாக துணைவேந்தரும் அறிவித்துள்ளார்.


வரும் ஜூன் மாதம் கல்வியாண்டு துவங்கும் நிலையில், விதிமுறைகளுக்கு முரணாக பணிபுரியும் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் தற்காலிக அடிப்படையில், தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளிக்காத வண்ணம் இன்று நடக்கும் சிண்டிகேட் கூட்டத்தில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us