வி.ஐ.டி., பல்கலை நுழைவுத் தேர்வு ஆந்திர மாணவர் முதலிடம்
வி.ஐ.டி., பல்கலை நுழைவுத் தேர்வு ஆந்திர மாணவர் முதலிடம்
UPDATED : மே 09, 2011 12:00 AM
ADDED : மே 09, 2011 03:32 PM
வி.ஐ.டி., பல்கலை நடத்திய பி.டெக்., நுழைவுத் தேர்வில், ஆந்திராவைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் முதலிடம் பிடித்துள்ளார்.
வி.ஐ.டி., பல்கலையில், பி.டெக்., - பி.இ., - பயோ-டெக்னாலஜி உள்ளிட்ட 13 பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது.
இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 102 நகரங்களில் நடந்த இத்தேர்வில், மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 324 பேர் பங்கேற்றனர். இதில், பி.டெக்., பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விசுவநாதன் நேற்று வெளியிட்டார்.
பல்கலை துணைத் தலைவர்கள் சங்கர், ஜி.வி.சம்பத், சேகர், துணைவேந்தர் ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதுகுறித்து விசுவநாதன் கூறியதாவது: இந்த நுழைவுத் தேர்வில், முதல் பத்து இடங்களில், ஆறு இடங்களை ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.
ராஜமுந்திரியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் முதலிடமும், ஐதராபாத்தைச் சேர்ந்த சாய்கிரண் இரண்டாமிடமும் பிடித்துள்ளனர்.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளை www.vit.ac.in, examresults.net, www.schools9.com உள்ளிட்ட இணையதளங்களில் காணலாம். இவ்வாறு விசுவநாதன் கூறினார்.