தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவில் சாதித்த மாணவர்கள் கூறுவது என்ன?

மாநில அளவில் சாதித்த மாணவர்கள் கூறுவது என்ன?

மாநில அளவில் சாதித்த மாணவர்கள் கூறுவது என்ன?


UPDATED : மே 10, 2011 12:00 AM

ADDED : மே 10, 2011 02:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2011 12:00 AM ADDED : மே 10, 2011 02:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, சாதித்த மாணவர்கள், தாங்கள் எப்படி படித்தோம் என்பதை இங்கே கூறி இருக்கிறார்கள்.


1 அரசுப் பள்ளிகளில் புதுச்சேரி அளவில் வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் உதயசந்தர், 1,154 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளார்.  மாணவர் உதயசந்தர் கூறுகையில், "அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என திட்டமிட்டு படித்தேன்" என்றார்.


2. புதுச்சேரி, ஏம்பலம் மறைமலையடிகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் சதீஷ்குமார், 1,138 மதிப்பெண்களுடன், 2ம் இடத்தை பிடித்துள்ளார்.  சதீஷ்குமார் கூறும்போது, "விடுமுறை நாட்களிலும் பள்ளியில்தான் நேரத்தைச் செலவிடுவேன். சிறப்பு வகுப்புகள் நடத்தியது, நான் அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்தது" என்றார்.


3. புதுச்சேரி, முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யா, 1,133 மதிப்பெண்களுடன், 3ம் இடத்தை பிடித்துள்ளார்.  நித்யா கூறுகையில், "பொதுத் தேர்வு நேரத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படித்தேன்" என்றார்.


4 விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் வேல்முருகன், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவர் கூறுகையில், "சக மாணவர்கள் சந்தேகங்கள் கேட்டபோது, தயக்கம் இல்லாமல் சொல்லிக் கொடுத்தேன். பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் அனைத்து பாடங்களையும் அன்றே படிப்பேன்." என்றார்.


5. மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த, நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துகவி, காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலையில் பள்ளி முடிந்த பின்பும் படிப்பேன்" என்று கூறினார்.


6. இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம்,&'&' என மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரகுநாத் தெரிவித்தார்.


7. புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துராஜ் ரேடியோ, டிவி பாட பிரிவில் மாநில அளவில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். "ஆர்வத்துடன் படித்ததால்  நல்ல பதிப்பேன் பெற்றேன்" என்றார்.


8. நெல்லை மாவட்டம் பங்களா சுரண்டை பேரன்புரூக் பள்ளி மாணவர் தினேஷ்குமார் பிளஸ் 2 தேர்வில் எலக்ட்ரிக் டொமஸ்டிக் அப்ளையன்ஸ் (இடிஏ) பாட தியரியில் 199 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். "நான் ஆரம்பம் முதலே ஆசிரியர்களின் ஆலோசனையின்படியும், பெற்றோரின் அறிவுரைப்படியும் படித்தேன்" என்றார்.


9. வீரவநல்லூர் செயிண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவகாமி விலங்கியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். ""வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த ஊக்கத்தினால் நான் நன்றாக படித்தேன்" என்றார்.


10. தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சோபனாவள்ளி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இவர், "பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் தான் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெறுவதற்கு காரணம்" என்று கூறினார்.


11. தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜினி பிரியதர்சினி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். "எல்.கே.ஜி முதல் எனது படிப்பில் தந்தை அளித்த ஊக்கம் தான் நான் இந்த அளவிற்கு மார்க் எடுப்பதற்கு உதவியுள்ளது" என்று கூறினார்.


12. தினமலர் ஜெயித்துக்காட்டுவேன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக ஆலோசனை கிடைத்தது என்று மதுரை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மதுரை காக்கை பாடினியார் பள்ளி மாணவி கவிதா (1146) கூறினார்.


13. மதுரை மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற  ஈ.வே.ரா., பள்ளி மாணவி பரணி (1142), "ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களை அன்றன்று படித்துவிடுவேன்" என்றார்.


14. . மதுரை மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்ற  திரு.வி.க., பள்ளி மாணவி அனிதா (1124), "திட்டமிட்டு படித்ததே வெற்றிக்கு காரணம்" என்றார்.


15. "டிவி பார்க்கும் பழக்கம் இல்லாததால் என்னால் படிப்பில் சாதிக்க முடிந்தது" என சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த என்.எல்.சி., பள்ளி மாணவி அனிதா கூறினார்.


16. பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி யஷாஷ்விணி, 1,180 மதிப்பெண்கள் பெற்று கோவை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். பள்ளியில் அளித்த தொடர் பயிற்சிகளே தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் யஷாஷ்விணி.


17. மொழிப்பாடம் இல்லாததால் மாவட்ட அளவில் முதலிடத்தை தவறவிட்டார் அவிலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ச்சனா.  மாணவி கூறுகையில், "சிறுவயதிலேயே அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற இலக்குடன் படிப்பேன்"  என்றார்.


18. பிளஸ் 2 தேர்வில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்யும் வியாபாரியின் மகள் மாலதி, கோவை ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி. கோவை மாநகராட்சி பள்ளிகளில் இரண்டாமிடத்தை பிடித்து, அரசு பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார். "ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற வெறியும், பெற்றோர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பும்தான் அதிக மதிப்பெண் பெற காரணம்" என்றார்.


19. சத்துணவியல் பாடத்தில் அவினாசிலிங்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி  மடோனா மாநில அளவில் முதல் இடம் பிடித்தார். அவர் கூறுகையில், பொதுத் தேர்வில் சிறந்து விளங்க படிப்பில் அதிக கவனம் செலுத்தினேன்" என்றார்.


20. சத்துணவியல் பாடத்தில் அவினாசிலிங்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி  சூர்யா மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். அவர் கூறுகையில், "பையோ மெடிக்கல் இன்ஜி., படிக்க உள்ளேன்" என்றார்.


21. சத்துணவியல் பாடத்தில் அவினாசிலிங்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி  மேனகா மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். மேனகா கூறியதாவது, "சத்துணவியல் பாடம் மிகவும் பிடிக்கும். அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்தேன்."


22. பீளமேடு ஸ்ரீ கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹரி ஆனந்த் 1173 மதிப்பெண் பெற்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலிடத்தை பெற்றுள்ளார். ஹரி ஆனந்த் கூறுகையில், "பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த பயிற்சி, ஊக்கம்தான் இந்தளவு மதிப்பெண் எடுக்க வைத்துள்ளது" என்றார்


23. அரசு உதவி பெறும் பள்ளிகளில், மணி மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி 1169 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். வைஷ்ணவி கூறுகையில், "பழைய கேள்வித்தாள்களுக்கு விடையளித்து பயிற்சி அளித்தது உதவிகரமாக இருந்தது. பாடங்களை புரிந்து படித்ததால் இரண்டு பாடங்களில் சென்டம் பெற முடிந்தது" என்றார்.


24. பி.எஸ்.ஜி. சர்வஜனா மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா மூன்றாமிடம் பிடித்துள்ளார். சந்தியா கூறுகையில், "தினமும் காலை நடத்திய மாதிரி தேர்வுகள்தான் அதிக மதிப்பெண் பெற உதவின. பாடங்களை புரிந்து படித்தேன்" என்றார்.


25. மதுரை மாவட்டத்தில் தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை (பிரெஞ்ச்) முதற்பாடமாக படித்தவர்களில், மதுரை வி.எம்.ஜே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.சுபா (1186) முதலிடம் பெற்றார். சுபா கூறியதாவது: பாடங்களை மறுநாள் படிக்கலாம் என நினைக்காமல் தினமும் படித்தேன். ஒவ்வொரு பாடத்திற்கும் வீட்டில் நானே தனியாக தேர்வு எழுதி பயிற்சி பெற்றேன்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us