தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை வழங்க அனுமதி கிடைக்குமா?

தனியார் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை வழங்க அனுமதி கிடைக்குமா?

தனியார் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை வழங்க அனுமதி கிடைக்குமா?


UPDATED : மே 11, 2011 12:00 AM

ADDED : மே 11, 2011 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2011 12:00 AM ADDED : மே 11, 2011 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை சப்ளை செய்ய, தகுதியான பதிப்பகங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து வரும் மே 16 முடிவெடுக்கப்படுகிறது.


நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதர வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் அமலுக்கு வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை, அரசு உருவாக்கிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரும். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு இரு விதமான சாய்ஸ் தரப்பட்டுள்ளன. ஒன்று, தனியார் பள்ளிகள் விரும்பினால், அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அமல்படுத்தலாம்.


இல்லையெனில், அரசு கூறியுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில், தனியார் பதிப்பகங்கள் தயாரித்துள்ள பாடப்புத்தகங்களை அமல்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையும், தனியார் பதிப்பகங்களிடம் இருந்து மாதிரி பாடப்புத்தகங்களை மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் வரவேற்றது. கடைசி தேதியான ஏப். 5 வரை, 51 பதிப்பகங்கள் விண்ணப்பித்தன.


இந்த புத்தகங்கள் மீது, பாட வாரியான நிபுணர் குழு ஆய்வு நடத்தி தகுதியான பாடப் புத்தகங்களை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மே 16ல், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில், நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள பாடப்புத்தகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அனுமதி வழங்கும் பாடப் புத்தகங்களை மட்டும், சம்பந்தபட்ட பதிப்பகங்கள், பள்ளிகளுக்கு வினியோகம் செய்யலாம்.


கல்வி வாரியத்தின் ஒப்புதலைப் பெறாத புத்தகங்களை, பள்ளிகளுக்கு வினியோகம் செய்யக் கூடாது. வாரியத்தின் ஒப்புதல் பெறும் புத்தகங்கள், அவற்றின் பதிப்பாளர்கள் ஆகிய விவரங்கள், மே16 மாலை வெளியிடப்படும் என கூறப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகள், தனியார் பதிப்பகங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்க திட்டமிட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us