தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழகம் முதலிடம்

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழகம் முதலிடம்

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழகம் முதலிடம்


UPDATED : மே 11, 2011 12:00 AM

ADDED : மே 11, 2011 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2011 12:00 AM ADDED : மே 11, 2011 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லி: கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்ற 3 கட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில், இறுதியாக தேறியவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய ஆட்சிப்பணி(ஐ.ஏ.எஸ்), இந்திய வெளிநாட்டுப் பணி(ஐ.எப்.எஸ்), இந்திய காவல் பணி(ஐ.பி.எஸ்) மற்றும் குரூப்-ஏ மற்றும் குரூப்-பி நிலையிலுள்ள மத்திய பணிகளுக்கு இந்த தேர்வுகளில் தேறியவர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்கள்.


மொத்தம் 920 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த தேர்வுக்கு மொத்தம் 5,47,698 பேர் விண்ணப்பித்து, முதல்நிலை தேர்வை 2,69,036 பேர் எழுதினார்கள். அதில் 12,491 பேர் முக்கிய தேர்வுக்கு தகுதி பெற்றனர். இதனையடுத்து, 2589 பேர் இறுதி நிலையான நேர்முகத் தேர்வுக்கு தேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த எஸ்.திவ்யதர்ஷினி என்ற பெண்மணி, இந்தியாவிலேயே முதலாவதாக தேறியுள்ளார். அவருக்கு இது இரண்டாவது முயற்சி. இரண்டாம் இடம் பெற்றவரும் ஸ்வேதா மொஹந்தி என்ற பெண்மணிதான். மூன்றாம் இடத்தை ஆர்.வி. வருண் குமார் என்ற ஆண் பெற்றுள்ளார்.


சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 25 இடங்கள் பெற்றவர்களில் 20 பேர் ஆண்கள் மற்றும் 5 பேர் பெண்கள். இந்த 25 பேரில் 15 நபர்கள் பொறியியல் பின்னணியிலிருந்து வந்தவர்கள், 5 பேர் மருத்துவ பின்னணியில் இருந்தும், இதர 5 பேர் வணிகம், மேலாண்மை, மானுடவியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பிரிவுகளில் இருந்து வந்தவர்கள்.


இந்த 25 பேரில், 8 நபர்கள் தங்களின் முதல் முயற்சியிலேயே தேறியுள்ளார்கள். மொத்தமாக தெரிய 920 பேரில் 28 நபர்கள் மாற்று திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாப் 10 பட்டியலில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us