தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறுவதில் புதிய முறை

கோவையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறுவதில் புதிய முறை

கோவையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறுவதில் புதிய முறை


UPDATED : மே 14, 2011 12:00 AM

ADDED : மே 14, 2011 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2011 12:00 AM ADDED : மே 14, 2011 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெறுவதில் புதிய நடைமுறை ஜுன் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


தற்போது இந்தியா முழுவதும் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் பாஸ்போர்ட் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தவிர அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள பாஸ்போர்ட் பிரிவிலும், ஸ்பீடு போஸ்ட் பிரிவிலும் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


தற்போது பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனிலேயே கிடைப்பதால் அதை பூர்த்தி செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் நேர்காணலுக்கான தேதியை ஆன்லைனிலேயே நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளில் அந்தந்த மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர்கள் சென்று தங்கள் விண்ணப்பங்களையும், ஆவணங்களையும் அளித்தால் அதை அலுவலர்கள் பரிசீலனை செய்வார்கள். அதன் பின்னர் போலீஸ் சரிபார்ப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் வழங்கப்படும்.


நாளுக்கு நாள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெறுவதில் புதிய நடைமுறை அடுத்த மாதம் (ஜுன்) முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பின்னர் நேர்காணல் நிர்ணயிக்கப்பட்ட நாளில் விண்ணப்பதாரர்கள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களையும், ஆவணங்களையும் அளித்தால் அதை டி.சி.எஸ். நிறுவனத்தினர் பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். அப்போது பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவரும் தனியார் நிறுவனத்தில் இருப்பார்.


டி.சி.எஸ். நிறுவனத்தினர் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை மட்டுமே பெற்று பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இதற்காக கோவை அவினாசி சாலையில் டி.சி.எஸ். அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.


மற்றபடி விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்தல், போலீஸ் சரிபார்ப்பு, பாஸ்போர்ட் வினியோகம் ஆகிய பணிகளை வழக்கம் போல பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தினரே மேற்கொள்வார்கள்.


இதன்படி அடுத்த மாதம் முதல் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தனியார் நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தினரே பெறுவார்கள். எனவே பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்காக இனி பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியதில்லை.


பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தனியார் நிறுவனத்தினர் பெறும் புதிய முறை ஏற்கனவே புனா, சண்டிகார் போன்ற நகரங்களில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அது வெற்றிகரமாக நடைபெற்று வருவதால் அது போன்ற நடைமுறையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


கோவையில் அடுத்த மாதம் முதல் இந்த புதிய முறை பின்பற்றப்படுகிறது. எந்த தேதியிலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us